---கசியும் ரத்தம்-----

---கசியும் ரத்தம்-----

கடைசி சொட்டு பால் வரை
காம்புகளில் இருந்து கரந்தாயிற்று.

அவிழ்த்துவிட்டதும்
வற்றிய மடியில்
பாலென்று எண்ணி
பச்சை ரத்தம் உறிஞ்சி குடித்துவிடுகிறது.
கன்றுகுட்டி...

வழக்கமாய் குரல் எழுப்புவதைப் போல்
வலியில் கத்துகிறது பசு
" அம்மா " " அம்மா " .........

---தமிழ்தாசன்---

எழுதியவர் : ----தமிழ்தாசன்--- (23-Jan-12, 10:50 am)
பார்வை : 356

மேலே