நட்பு

நண்பா!!
ஏனோ தெரியவில்லை
உன்னை பற்றி நினைக்காத
தருணங்கள் எல்லாம்
என் நினைவில்
நிற்பதேயில்லை!!

உன் பாரா குணமே
உன்னை பார்த்த முதல்
தருணத்திலேயே என்னை
ஈர்த்தது என்னவோ
உண்மைதான்!!

தாயின் கருவறையை விட
உன் கரு வழியின்
கதகதப்பே எனக்கு
பாதுகாப்பளிகிறது!!

வாழ்வின் எதார்த்தத்தை உணர
வைத்தவன் நீ
என்பதனாலோ என்னவோ
எதார்த்தமாய் நுழைந்து
விட்டாய் என்னுள்!!

உன் நட்பின் கரம் கோர்த்து
கொண்டே கடக்க விரும்புகிறேன்
என் பாதை முழுதும்!!


அடிக்கடி தவறி விழவே
விரும்புகிறேன் தாங்கிபிடிக்க உன்
கரங்கள் நீளும் என்ற மகிழ்ச்சியில்!!

வெற்றியில் மகிழ்ந்தபோது கரம்
குடுத்து ஊக்குவிக்கவும்
தோல்வியில் துவண்ட
போது தோள்களில் சாய்த்து
அரவணைக்கவும் துன்பம்
வரும்போது நன் இருக்கிறேன்
என்று உடன் இருக்கவும்
தோழா நீ போதும் நான்
என் வாழ்வை
ரசித்து வாழ!!!

எழுதியவர் : (29-Jan-12, 8:46 pm)
Tanglish : natpu
பார்வை : 597

மேலே