இன்று பிறந்தேன், இறப்புச் செய்தியும் கிடைத்தது
இறப்பின் ரகசியத்தைக் கூறுவது சரியா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால், வாழ்வின் ரகசியம், இறப்பின் ரகசியம் - இவற்றை அறிந்துக்கொள்வதற்கான வழிகளைக்கூறுவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். இனி கவிதையை ஆரம்பிக்கிறேன்....
இவ்வுலகில்,
வாழ்வின்பொருளைவிட
பொருளே பிரதானமென்று - பலர்
கேவலம் அப்பொருட்களைப்பெற வரிசையில்கூட நிற்க்காது
ஒவ்வொருவரையும் முடிந்தவரையில் அகற்றிவிட்டு
அனைத்துப்பொருட்களையும் தன்வசப்படுத்த
எல்லைகளில்லா ஆசைகளுடன்
முட்டிமோதிக்கொண்டு ஓடுகிறார்கள்,
இவ்வாழ்க்கையில்.
சற்றே எழுதுவதை நிறுத்திவிட்டு யோசித்தேன்...
மூன்றாவது வரியிலுள்ள
"பொருளை" நீக்கிவிட்டு
அவ்விடத்தில் "இறப்பை" நிரப்பிவிட்டால்......
சிரிப்புவந்துவிட்டது,
அவ்வனைவரும் பின்னோக்கி ஓட்டம்பிடிப்பார்களோ.......
இவர்கள்அனைவரும் இறைவனையும், இயற்கையையும்
என்ன நினைத்துவிட்டார்கள் என்றே தெரியவில்லை
ஆனால் இறைவன்,
இவர்களின்மீதுமுள்ள தொடர்நோட்டத்தையும் விட்டுவிடுவதில்லை
(நான் இக்கவிதையில் "வாழ்வின்பொருளைப்" பற்றி
விளக்கமளிக்கப்போவதில்லை,
ஏனெனில், முன்னரே, என் கவிதைத்தொகுப்புகளில
பலமுறை இதைப்பற்றி விளக்கமளித்துள்ளேன்;
இக்கவிதையில் "இறப்பின் ரகசியம்" சொல்ல முற்ப்பட்டுள்ளேன்)
பிறப்பிற்கும், இறப்பிற்கும்
இடைப்பட்ட காலஅவகாசம்
தேவைக்குமீறியே கொடுக்கப்பட்டுள்ளது -
இதற்கிடையில்,
வாழ்வின்பொருள் அறிவதற்கானவாய்ப்பும்
பலகாலகட்டங்களில் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனைத்தையும் பிறப்பிலே கொடுத்த இறைவன்
உடன் கொடுத்தனுப்பிய இன்னொன்று
"இறப்பின் ரகசியத்தை" அறியஉதவும்
அற்ப்புதச்சாவி!
என்ன அந்த அற்ப்புதச்சாவி?????
வாழ்வில் சின்னச்சின்ன ஆசைகள் துளிர்விட - அது
முதன்முதலில் விலகுவதர்க்கானபாதையில் முதலடிவைத்தது
ஆசைகள் மேலும் வளர - அது
விலகுவது தெரிந்தாலும் சிலநடுக்கங்களோடு நகர்கிறோம்
ஆசைகள் மேலும் மேலும் வளர - அது
விலகுவதை இடையிடையே அவ்வப்போது மறக்கிறோம்
ஆசையின்உச்சியில் அமர்ந்தபிறகு -
அதுஒன்றிருப்பதையே முழுதாய்மறந்து
தன்னாட்சிநடக்கிறது என்றமிதப்பில் இருக்கிறோம்
இவ்வாறு வாழ்க்கை சென்றுகொண்டிருக்க (ஆட்டத்துடன்).....
திடீரென ஒருநாள்
இறப்பின்கதவு சடாரெனத் திறக்கையில்,
பதற்றம்பற்றிக்கொண்டு
என்னஆயிற்று, என்ன செய்ய,
எதை மறந்தோம், எதை மறந்தோம்...
எனத் தேடத் தேட, தேடத் தேட......
உடலில் உஷ்ணமதிகரிக்க விழிகள்அகன்று தேடுகிறது
அச்சமயம் வேலைச்செய்யா அறிவும் தேடுகிறது
பயத்தால் மனஇறுக்கம் மிகுதியாகி
விழிகளில் கண்ணீர் அணைதிறந்ததுபோல் புறண்டோட
அதிவேகமாய் அடிக்கும் இதயத்துடிப்பு
நிற்க்கப்போகும் சில நொடிகளுக்குமுன்னால்
முகம்காடியது அவ்அற்ப்புதச்சாவி -
"உண்மை".
வாழும்போது,
இதன் சக்தி அறியாததால்
இதன் அர்த்தம் புரியாததால்
மிகமுக்கியத் தருணமான
கடைசிதருணத்தில்,
இவ்வாறு அமைதியின்றியே உயிர் விடைபெறுகிறது.
அனைத்தும் கொடுத்தும்
படைத்த இறைவனைப் பழித்தும் - அவன்
நீ இறக்கும்தருவாயிலும் அச்சம்தவிர்க்க
அன்றேகொடுத்துவிட்டான் அற்புதச்சாவியை
அதை (உண்மையை) அறிந்து
சரியாகப் பயன்படுத்தினால்மட்டுமே
இறக்கும் தருவாயிலும் அமைதி காணலாம்