நீ நிற்கும் ரகசியம் . . .

இருவரும் சேர்ந்து
செல்லும் பயணங்களில்
எல்லாம் எனக்கு
படபடப்புதான் . .

காலியான இருக்கையில்
என்னை அமர்த்திவிட்டு
நீ சற்றே எட்டி
நிற்பாய் நட்பாய்.

ஒவ்வொரு முறை
பக்கத்து சீட்டு காலியாகும்
போதும் உன்னை
அழைக்கலாம் என்று
பார்த்தால் அவசரமாய்
யாரேனும் வந்தமர்வார்கள்
ஆயாசத்துடன் . . .

ஒருமுறை அப்படிதான்
யாருமே வரவில்லை
என்று உன்னை மெதுவாய்
அழைத்தேன் என் மனதின்
ஆரவாரத்தை அடக்கி கொண்டு
ஆனாலும் நீ மறுத்து விட்டாய்

எனக்கு சரியான கோபம் ,
என்னிடம் உனக்கு பாசமே
இல்லை என்று உன்னிடம்
வாக்குவாதம் ஆரம்பித்தேன்
அரைமணிநேரம் . .

நீ ஒரு புன்னகையுடன்
கேட்டாய் ,

உன் அருகில் வந்து அமர்ந்து
விட்டால் எப்படி
உன் முகத்தை பார்த்து கொண்டே
வருவேன் என்று ?

அன்றிலிருந்து
பக்கத்து சீட் காலியாக
கூடாது என்று வேண்டி கொண்டுதான்
பஸ்ஸில் ஏறுவேன் . . .

எழுதியவர் : honey (30-Jan-12, 12:43 pm)
பார்வை : 376

மேலே