என் தோழி வெண்ணிலா !!!!!!!!!!!

நட்பு ஆரம்பிக்கும் இடம் பள்ளி
நான் மட்டும் சேர்ந்தே போனேன்
என் தோழியுடன் முதல் வகுப்பின்
முதலாம் நாளே .........

அவளை பிரிந்து அமர்ந்தது இல்லை
பள்ளியில் நான், விளையாட்டுக்குக்கூட
என்னை விட்டு விளையாட சென்றது
இல்லை .அவள் .

அவளை பிரிந்த காலத்தில்
மகிழ்ந்தது இல்லை நான் ,
எனை விட்டு சிரித்தது இல்லை அவள்
என் முன்னே அழுதது இல்லை அவள்

என் ஒரு துளி கண்ணீரை கூட
சிந்தவிட்டதில்லை அவள்
என் புன்னைகைதான் அவள் புன்னகை
என் மனம் வாடினால் அழுதே விடுவாள் அவள்

தின்றது இல்லை சிறு தீனியை கூட
என்னைவிட்டு அவள்
அனைவரிடமும் சொல்லிகொண்டேன்
இவள் என் உயிர் தோழி வெண்ணிலா என்று

வெண்ணிலா என்று பெயர் வைததாதால்
என்னவோ என் வெண்ணிலா சென்றுவிட்டால்
வெண்ணிலா இருக்கும் இடத்திற்கே
அவள் சென்ற அந்த நாளில் இருந்து
அமாவாசை என்பதே எனக்கு இல்லை

அமாவசை அன்று வானத்தில் எனக்கு
மட்டும் ஒளி தருவாள் என் வெண்ணிலா ....

என்றென்றும் தோழியின் பிரிவில்
பிரியாமல் அவள் தோழி ப்ரியா .......

எழுதியவர் : ப்ரியாராம் (2-Feb-12, 3:40 pm)
பார்வை : 309

மேலே