கவித் தோழி ரஞ்சிதாவின் கவிதைக்கு எழுதிய பதில்

மொழிப் பற்று தேவை உங்களை ஆதரிக்கிறேன் பிறமொழி வெறுப்பும்


காழ்ப்பும் தவறு சினேகிதி ஒருவன் ரவி


என்று பெயர் கொண்டு தனித் தமிழ்


என்று சொல்வானே ஆனால் முதலில்


தன பெயரை தமிழில் ஞாயிறு அல்லது


ஆதவன் என்று மாற்றிக் கொள்ளவேண்டும்


மொழிகள் உள்ளங்களை இணைக்கும்


உறவுப் பாலங்கள் குறிகிய மனம் படைத்த சுய நலமிகளும் அரசியலில்


ஆதாயம் தேட நினைப்பவர்களும்


பிறமொழிகளை அன்னியமாக நினைக்கலாம் கவிஞர்கள் நினைத்தல்


கூடாது பின் தாகூருக்கு டாட்டா சொல்லி விடவேண்டுமா


ஒரு கர்ஜனை வடமொழி தவிர்க்க


முடியவில்லை .சரி தர்பவத்திலும்


தர்சமத்திலும் எத்தனை இருக்கின்றன


உங்களுக்குத் தெரியுமா ? குங்குமம்


எந்தப் பெண்ணாவது வெறுப்பாளா ?


பெண்கள் மான்தான் மயில்தான்


தேவையானால் புலியாக நின்றார்கள்


நிற்பார்கள் உண்மையே முறம் காட்டி


புலியோட்டிய புறநானூற்றுப்


புலிப் பாவையர் நமக்குப் புதிதல்லவே


அறிவியலாளர்கள் தன்னலமற்ற


மானுடத் தொண்டர்கள் கவிஞர்கள்


உலக குடிமகன்கள் நாம் கொள்ள வேண்டியது அன்பு வெறுப்பல்ல


ரஞ்சிதா தங்கள் கவிதைகள் ரஞ்சிதமானவை இனியவை தொடந்து


எழுதுங்கள் என் கவிதையின்ன்பால்


அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்த்தி


வரவேற்றீர்கள் அதே அக்கறையுடனும்


அன்புடனும் என் மனதில்பட்டதைச்


சொன்னேன் தவறிருந்தால் மன்னிக்கவும்


----அன்புடன், கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Feb-12, 10:51 am)
பார்வை : 242

சிறந்த கட்டுரைகள்

மேலே