சிறகு முளைத்தது

சிறகு முளைத்து பறக்க நினைதேன்
சுதந்திரமாக!!!!
சிறகும் முளைத்தது!! பறந்து விட்டேன்
சுதந்திரமாக அல்ல
கட்டாயத்தால்......

எனக்கு அறிவுரை கூற/கேட்க
அறவே பிடிக்காது
ஆனாலும் மற்றவர் காது சுதந்திரமாக இருக்கின்ற காரணத்தினால்
இங்கே தின்னிக படுகிறேன்
ஏராளமாய்!!!! எனக்கும் சேர்த்து ...

அண்ணா ஹசாரே உண்ணாவிரதமாம்
தேச நலனுக்காக....
அன்பு தலைவரே, உங்களுக்கு ஒரு
வேண்டுகோள்....
அடுத்த வேளை உணவு கிடைக்குமோ
என ஏங்கி கிடக்கும் ஏழைகளுக்கே
இங்கு நாதி இல்லை...

"பசி" என்றால் என்னவென்று கேட்க கூட
நேரம் இல்ல பணக்காரர்கள் மத்தியில்
ஏழை பேச்சு எப்பொழுது சபை ஏறும்?...

"உண்ணாவிரதம்" - உணவு கிடைத்தும் உண்ணாமல் இருப்பது..
பின் உணவு கிடைக்காமல் உண்ணாமல் இருப்பதை இங்கே என்னவென்று சொல்வது????!!!!!!

ஏழை- ஒரு வேளை உணவுக்காக ஓடுகிறான்
பணக்காரன்- ஒரு வேளை ஓடாவிட்டால்
உண்ட உணவு செரிக்காது என
ஓடுகிறான் .....

ஏழைக்கும் பணக்காரனுக்கும் இங்கே எப்பொழுதும் ஒரு இடைவேளி...
அதில் நசுக்கப்படும்
ஏராள மனித முயற்சிகள்....

"தங்கம்" விலை ஏறுதாம்
நல்ல வேளை நமக்கு கவலை இல்லை என
காதில் தடவி கொண்டே காண்பித்தால்
அவள் காதுகளில் குச்சி!!!!

((இது வாழ்கையில் வெல்பவனுக்கு அல்ல வாழ்கையை வெல்பவனுக்கு அர்ப்பணம்!!!!))

எழுதியவர் : கவியாமுதன் (3-Feb-12, 2:22 pm)
பார்வை : 266

மேலே