சொல்ல படாத வலி
பிடிக்கல காத்தோடு தூசிய கலந்து
விருட்டென்று போகும் பேருந்தில் பயணம் செய்ய
புகை வண்டில பயணிக்க ஆசை
ஆர்வமாய் கிளம்பி மகிழ்வோடு பயணித்தேன்
ஏழு நாள் சுவாரசியமாக சென்றது
பல பல வேடிக்கைய தன்னுள் அடக்கிய
கூ குச்சு குச்சு ரயிலு வண்டி
இன்றும் அப்படி தான் நகர்ந்து கொண்டிருந்தது
ரயில நான் பயணித்த மணி நேரம்
திடிருன்னு கேட்ட ஒரு குரலால்
திடிக்கிட்டு நான் திரும்ப
அர்த்தனாடீஸ்வரரின் அம்சமாய்
திருநங்கை ஒருவள்
மாமா
அக்காட்ட காசு வாங்கி குடு மாமா ன்னு
கை தட்டி பிச்சை எடுத்தாள்
நான் அமர்ந்திருந்த பெட்டியில் இருந்தவர்கள்
முகத்தை ஒரு புறம் திருப்பிக்கொள்ள
எனக்கோ பிச்சையிட மனமில்ல
இறைவன் படைக்கும் போது
செய்த பிழையால்
பிளைக்க வழியற்று
கேலிப்பொருளாய்
உலவுகிறார்கள் வீதியிலே
அவர்கள் வாழ்வு சிறக்க
அரசு என்று வழி செய்யுமோ
எல்லோரையும் போல - விடியல்
அவர்களுக்கும் கிழக்கில் தான் என்று
சமுதாயம் உணர்ந்து - திருநங்கைகளுக்கு
உணர்த்தி அவர்களை ஆதரிக்கும் வரை
எல்லையில் போராடும் வீரர்களை விட
அதிகமாய் போராட விதி செயப்படுள்ளனர்
தன் அன்றாட வாழ்வை
நகர்த்தி செல்ல!!!!
அத்தகையோருக்கு உதவாவிட்டாலும்
அவர்களை மன உளைச்சளுக்குல்லாகும்
நம் கேலிகளை தவிர்க்கலாமே........