இன்டர்நெட் காதல் இனிமையா ?

நெட்டுலே பாத்தேன் நெசமா அழகன்
சட்டுன்னு தொலைஞ்சேன் ஜம்முன்னு காதல்
வந்தது வந்தது நெஞ்சில் நெஞ்சில்
வளர்ந்தது வளர்ந்தது ஈமெயில் ஈமெயில்

காதல் மயக்கத்துலே கண்ணு மண்ணு தெரியல
கல்யாணம் வரைக்கும் வந்தாச்சி...வந்தாச்சி !
கண்ணுலே நேருலே காணவில்லை இன்றுவரை
கடிதங்கள் மட்டுமே வெப்பிலே விசாரணை !

நேத்து எந்தன் நேருலே வந்தான் நெசமா
வேத்து நான் விழுந்தேன் ஒடனே பயமா
வழுக்கத் தலே சொத்தப் பல்லு வங்கு
வந்த வயோதிக தேகம் வாரே வா...!

வாக்கப் பட்டுப் போனவா செத்தா
வாங்கி எய்ட்ஸ் சேப்பா சொத்தா
நல்ல வேல பாத்துப் புட்டேன்
நானும் இப்போ தப்பிச்சிக் கிட்டேன்...!

வெப்பில் பாத்து காதல் பண்ணாதே
வெந்து நீயும் செத்துப் போகாதே...!

எழுதியவர் : (8-Feb-12, 2:34 pm)
பார்வை : 284

மேலே