இயற்கையே....!!!
இயற்கையே....
உன் இரக்கமில்லாத செயலால்
இந்த பூமியை
சில நொடிகள் துடிக்கசெய்தாய்
அதனால்
பூமியின் மேல்
துடித்துக்கொண்டிருந்த
எத்தனை ஆயிரம் இதய துடிப்பு
நின்றுவிட்டதை நீ அறிவாயா?
இறந்த மீனவ மனிதர்கள்
தன் அம்மாவை
"அம்மா" என்று அழைத்ததை விட
கடலை பார்த்து "கடல்லம்மா"
என்று அழைத்ததே அதிகம்
ஆனால்..,
நீயோ கடல் நீரை பொங்கவைத்து
அலையென அனுப்பிவைத்து
அவர்களையும் அழித்துவிட்டாயே
இது நியாயமா?
ஒன்று,
நீர்
கொடுக்காமல் கொல்கிறாய்
இல்லை,
நீரை
குடிக்கவைத்து கொல்கிறாய்
எதற்க்காக?
நான்கில் மூன்று பாகத்தை
கடலுக்கென ஒதுக்கிவிட்டாய்
மீதி இருக்கும் ஒரு பாகத்தையும்
பரித்துவிட்டால்
நங்கள் எங்கே செல்வோம்?
கடலுக்குள் இருக்கும் நீர்
ஊருக்குள் சிறுகடலாய் நிற்க்கிறது
அதிலே பாவப்பட்ட
மனிதனின் கண்ணீரும் கலந்திருப்பதை
நீ அறிவாயா?
இயற்கையே.....
உனது சீற்றத்தால்
எங்களை சீரழித்து விடாதே
உன்னை நங்கள் எச்சரிக்கவில்லை
உனக்கு நங்கள் கட்டளையிடவில்லை
உன்னை எதிர்க்கும் சக்தி எங்களுக்கில்லை
எங்களை காக்கும் கடவுள்
இருக்கிறாரா தெரியவில்லை!!
இல்லை அப்படியிருந்தும்
லஞ்சம் கொடுத்து உன் வசம்
வைத்துக்கொண்டாயா?
அதுவும் புரியவில்லை....
ஆகையால் தான்
உன்னிடம் கெஞ்சிக்கேட்கிறேன்
பூமியில் இருக்கும்
மீதி உயிர்களையாவது
விட்டுவிடு என...!!!!
(இது கவிதை அல்ல கண்ணீர் மடல்)
சுனாமியின் போது எழுதியது
deva .s