அன்று அளவளாவையில்...

முகப்பூச்சு கொடுக்காத வண்ணம் உன் இதழ் கொடுத்ததென்றேன்,
தினமும் உபயோகித்தால்தான் பயன் என்கிறாய் நாணிச் சிரிக்கிறேன் ...

நிலவின்று ஏனோ இத்தனை அருகில் என்றதும் எங்கென்று நான் விழிக்க ,
நீயோ என் கன்னம் தொட்டுக் காட்டுகிறாய் கிறங்கிப் போகிறேன் ...

காய்ச்சலென்றதும் பதறி உன் நெற்றித் தொட்டு இல்லையென்றேன் ,
இனி வந்துவிடும் என்கிறாய் புன்னகைத்தவாறு பூரித்துப் போகிறேன் ...

பசிக்கிறது என்றவுடன் அருகில் கடையேதும் உண்டோவென நான் தேட ,
நீயோ என் இதழ் வருடுகிறாய் நானிந்த உலகம் மறக்கிறேன் ...

எழுதியவர் : கவிதை ரசிகை (10-Feb-12, 7:29 pm)
சேர்த்தது : kavidhairasigai
பார்வை : 211

மேலே