யார் பெற்றோர்..?

ஓடுகின்றீர் ஓடுகின்றீர் ஓய்வின்றி ஓடுகின்றீர்
பணம் பணம் எனவே பறக்கின்றீர்
இரவெது பகலெது நிலவெது சூரியன்எது
அறியாமல் அலைகின்றீர்
பெற்ற பிள்ளையை புட்டிப்பாலோடு
போட்டுவிட்டு ஓடுகின்றீர்
வாரத்திற்கோ மாதத்திற்க்கோ ஒருமுறை
பிள்ளை முகம் காண்கின்றீர்
என்ன வாழ்க்கை இது...
ஏன் இந்த வாழ்க்கை முறை?
இதுவே தொடருமென்றால்
கெட்டழியும் உமது தலைமுறை...
பகட்டான வாழ்க்கை வாழ்வதைவிட
பண்பான வாழ்க்கை வாழ்வதே
உன் சந்ததிக்கு நீ செய்யும் பெரும்கடன்....

எழுதியவர் : ரத்னா (13-Feb-12, 12:15 am)
பார்வை : 488

மேலே