-:நல்ல தலைவன் :-
என் பாட்டனார் சொன்னார் காந்தியும் சுபாஷ் சந்திர போசும்
நான் பார்த்த நல்ல தலைவைர்கள் என்று என் தாத்தாவிற்கு
என் தாத்தா சொன்னார் பெரியார் ராமசாமி
நான் பார்த்த நல்ல தலைவைர் என்று என் அப்பாவிற்கு
என் அப்பா சொன்னார் காமராஜரும் எம் .ஜி . ஆரூம்
நான் பார்த்த நல்ல தலைவைர்கள் என்று எனக்கு
நான் சொல்கிறேன் என் மகனுக்கு
மகனே
" கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய் "