குப்பைலாரி

பாவம் துவைக்கும்
கங்கை நீரின்
தங்கையா நீ ?
பழையனவையும்
பழுதானவையும்-நீ
சுமந்து தூய்மை
செய்வதுபோல் செய்கிறாய் !
உரமிடுவது போல் -சாலையின்
தரம் கெடவே நீ போகிறாய் !
நீ சுமந்த கழிவுகளை - வெளியே
பூ மழையாய் பொழிகிறாய் !
உனை பார்த்து
முகம் சுழித்தோம்
முக்கின் துளைகளை
இருவிரல் கொண்டு
அடைத்தோம்
பாவம் துவைக்கும்
கங்கை நீரின்
தங்கையா நீ ?
பாற்கடல் கடைந்து
ஊற்றினாலும் -உன்னை
தூய்மையாக்க முடியாது .....
நீ தேரை சுமந்து போனாலும்
கால்கள் தள்ளிபோகுமே
என்னை கேட்காது .........
உண்மையில் நீ
பாவம் துவைக்கும்
கங்கை நீரின்
தங்கையா நீ ?