இன்னும் என்ன தோழா..?

வாழ்த்துக்கள் ஆயிரம் கிடைக்கட்டுமே..
வாழும் வாழ்க்கை ஒரு முறையே...!
நாளை நிலைக்குமா இவ்வுலகம்?
நன்றாய் நிலைக்கட்டும் உன் புகழே...!!

விண்ணில் மின்னும் பொன் நட்சத்திரம்,
வீணாய் ஜொலிக்குது அது ஏனோ..
விடியலை தேடி நீ போக...
வீதியில் ஒளியை வீசிடவே...!!!

கனவுகள் ஆயிரம் காண்போமே ...
கற்பனை கதவுகள் திறப்போமே..
இன்றில் இல்லை என்றாலும்,
என்றேனும் ஓர் நாள் ஜெயிப்போமே...!!!

இன்னும் என்ன தோழா...
தயக்கம் உன்னோடு ஏனோ...???

எழுதியவர் : கவி மணி (17-Feb-12, 11:31 am)
பார்வை : 674

மேலே