பரமஹம்சர் அருளியது-துறவறம்
துறவறம்
இல்லற இன்பம் இதுவன்றென்று
மனைவியல் வாழ்வில் வெறுப்புண்டு
துறவறம் சிறந்த முடிவென்று
யாத்திரை ஒன்றை மேற்கொண்டு
செல்கையிலே,
வைரமொன்று மணலிற் கண்டு
மனம் மாறுவாள் மனைவியென்று
மணலிடை மனைவி அறியாவண்ணம்
மறைத்திட கணவன் முயன்றிட
அறிந்த மனைவியும், “ஆசை நாயக!
பற்றற்ற இறைவனை பற்ற எண்ணி
பற்றுதல் பற்றிய பாரினிலே,
பட்டாடைகள் பல கழிந்தாய்!
ஆசை நீக்கிட ஆசை கொண்டாய்
ஆடை நீக்கினாய்!
ஆண்டவன் படைப்பில் ஆனந்தம் கொண்டாய்
அறிவு கொண்டாய்!!
ஆயினும் மணலிடை வைரம் கண்டாய்
மனமதிற் எங்ஙனம் துறவு கொண்டாய்?