நண்பன் எங்கே, நிம்மதி அங்கே!
நண்பன் எங்கே, நிம்மதி அங்கே!
பறிகொடுத்து விட்டேன் என் இதயத்தை
பயன் இல்லையோ என் வாழ்க்கை
உள்ளம் தேடும் உண்மை காதல்-
உலகத்தில் ஏதும் இல்லையோ?
பதை மறந்த பேதை ஆனேன்
இனி -
போதை மட்டும் தான் என் காதலியோ??
என் உடல் ரத்தம்
வேலை நிறுத்தம் செய்வது எப்போது??
தூக்கம் மறந்த என் கண்களுக்கு-
நிரந்தர மண்ணறை தூக்கம் எப்போது??
இனி கண்ணீரும்-
கவலையும் தான்
என் ஆறுதலோ??
-நண்பனை மறந்த,
காதல் தோல்வியின் கவிதை
அடைக்கலம் தர-
நண்பனின் இதய வீடு உள்ளது;
உள்ளே போடா...
நண்பன் எங்கே, நிம்மதி அங்கே!!