வேதாவின் ஆத்திசூடி - ஊ - கார வரிகள்
‘அ’ கர வரி அடிகளில்
‘ஊ’ காரம்.
ஊக்கமது கைவிடேல். ( ஒரு தொழில் செய்யும் போது முயற்சி, மனவலிமையைக் கைவிடாதே.)
இது ஒளவையாரின் வரி.
இனி எனது வரிகள்.
1. ஊக்கம் உயர்வுக்கு ஏணி.
2. ஊடல் இணைகளுக்கு இன்பம்.
3. ஊதாரித்தனம் வாழ்விற்கு உதவாது.
4. ஊதற்காற்றில் உடலைப் பேணு.
5. ஊமைக் காயம் ஆபத்துடைத்து.
6. ஊரிற்கு நல்லது செய்.
7. ஊராரை மதித்து வாழ்.
8. ஊழல் தீவினைக்கு வழி வகுக்கும்.
9. ஊறுகாய் உணவின் சுவை மாற்றும்.
10. ஊனமுடையோரையும் ஏற்று வாழப் பழகு.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-7-2010.