வேதாவின் ஆத்திசூடி - எ- கார வரிகள்

‘அ’ கர வரி அடிகளில்
‘எ’ கரம்.

எண்ணெழுத்து இகழேல்.

கணிதத்தையும் இலக்கணத்தையும் அவமதிக்காதே.
இது ஒளவையாரின் வரி.
இனி எனது வரிகள்.

1. எடுத்துக் காட்டு, நல்லவராக வாழ்ந்து.
2. எகத்தாளமாகப் பேசுவது தவிர்.
3. எடுத்தெறிந்து பேசுவதும் அழகல்ல.
4. எடை அதிகரிக்க விடாதே.
5. எண்ணம் தூயதாக இருத்தல் நலம்.
6. எத்தனை தரமும் நல்லதற்கு எத்தனிக்கலாம்.
7. எண் எழுத்து ஞானம் எவருக்கும் தேவை.
8. எண்ணும் எழுத்தும் ஏற்றம் தரும்.
9. எதிரியை நண்பனாக்குதல் நல்லதல்ல.
10. எதிர்ப்பைத் துணிவுடன் எதிர் கொள்ளு.
11. எதிர் நீச்சலிட்டு வாழ்வை வெல்.
12. எரிச்சலுணர்வை அண்டவிடாதே.
13. எச்சரிக்கையுணர்வு எப்போதும் தேவை.
14. எம்மை நாமே புகழ்தல் அழகல்ல.
15. எல்லம் (இஞ்சி) உணவில் சேர்.
16. எழுத்தைப் பிழையற எழுதப் பழகு.
17. எழுத்தைக் கற்பிப்போன் உயர்ந்தவனாகிறான்.
18. எறும்பு போல் சுறுசுறுப்பாயிரு.
19. எல்லை மீறாத அளவு எதற்கும் தேவை.
20. எழில் கொஞ்சும் இயற்கை ஆரோக்கியமுடைத்து.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
4-8-2010.

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம் (23-Feb-12, 12:59 am)
பார்வை : 237

மேலே