விபத்து

ஒருகணம் அசைவின்றி மயங்கி விழுந்தாள், அந்த தாய். ஆசையாய் வளர்த்த ஒற்றை மகனையும் இழந்துவிட்டாள். இருபத்திரண்டு வருடங்களாக காத்துவந்த அவளது சொத்தை இன்று இழந்துவிட்டாள்.

ஆறுதல்சொல்ல ஊரே திரண்டது.கண்கள் இருந்தும் அவளால் பார்க்க முடியவில்லை. ஊரே அழுதாலும் இவள் அழவில்லை...

"இன்பமோ துன்பமோ அளவோடு இருந்தால்,
அழுகையில் முடியும். அளவுகடந்தால் உணர்வற்றுப்போகும்" என்பது,
உண்மைதான்போலும் ...

இப்படி நடக்கும் என்று அவன்தான் அறிவானா, இல்லை...அவள்தான் அறிவாளா...எல்லாம் முடிந்துவிட்டது.

இருசக்கர வாகனத்தில் சென்றவன், முன்சென்ற லாரியை முந்த முயன்றதால், நேர்ந்த விபரீதம் இது.

எதிர்பார்க்காத நிகழ்வு, எத்தனைபேருக்கு கஷ்டத்தை தந்துவிட்டது...எப்படி தாங்கிக்கொள்வாள், எல்லாம் அவன்தான் என்று இருந்தவள் மட்டும்...

எத்தனையோ விபத்துக்கள் நொடியில் நடந்தாலும்,
நேசித்த உறவுகளின் பிரிவை மட்டும் நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை...

எஞ்சியுள்ள நெஞ்சங்களுக்காக
வாழத்தான் வேண்டியுள்ளது
வலிகலனைத்தும் தாங்கிக்கொண்டு...

எழுதியவர் : Anithbala (23-Feb-12, 1:57 am)
பார்வை : 565

மேலே