ஒரு சிறுவனின் கவிதை
முதல் வகுப்பில் சேர்வதற்கு
முத்தாய்ப்பாக விண்ணப்ப பூர்த்தி...
முந்தங்கிய வகுப்பு
பின்தங்கிய வகுப்பு - மிகவும்
பின்தங்கிய வகுப்பு
முழுவதும் நிரப்பி
முதல் வகுப்பு தொடங்கியது
" ஜாதி இரண்டொழிய வேறில்லை "
இப்போது முறுக்கிய மீசையில்
பாரதியார் - தேசியக் கவி என்பதை விட
ஐயங்கார் என்றே எனைப் பார்த்து முறைப்பதாய்