விதவை
அன்று ஆறுதல் சொன்னவர்கள் கூட
அழைப்பதில்லை அவரவர் இல்ல
சுபகாரீயங்களுக்கு
விஷேசங்களுக்கு விரோதியாய்
துலங்கும் மங்கலங்களுக்கு தூரமாய்
ஒரு மூலையில் ஒதுங்குகிறாள்
அந்த வெள்ளை மலர்!!
நச்சு தின்ற சிலர் எச்சி துப்பும்
ஒன்று இந்த விதவை கலாச்சாரம்
மிஞ்சிய சமுதாயமாவது மாறிவிடுங்கள்
பிஞ்சிலே பிழை படுபவரை பிழைக்க விடுங்கள்
காதும் காதும் வைத்தவாறு கொன்று விடுங்கள்
இல்லையேல் இந்த விதவை என்ற வார்த்தையை வேற்று கிரகத்திற்கு விற்றுவிடுங்கள்!!!

