நீதானடா நண்பான்..!!
நான் திரும்ப திரும்ப தவறு செய்வேன்
நீ திருத்தவேண்டும் என்பதற்காக
நீ திரும்ப திரும்ப எடுத்துச் சொல்வாய்
நான் தவறாகிவிடக்கூடாது என்பதற்காக
உறவுகள் சொல்லும் வார்த்தைகளைவிட
உன் வார்த்தையில்தான் உண்மையான அன்பிருக்கும்
பள்ளிசென்று கற்ற பாடத்தைவிட
உன்னோடு சென்ற இடங்களில்
கற்றவைதான் மிக அதிகம்
என்னதவம் செய்தேன் நான்
உன்போல் நண்பன் கிடைக்க...
ஏழுபிறவி இருக்குமென்றால்
என் எல்லாப் பிறவியிலும்
என்னோடு நீ இருக்கவேண்டும்...
உன் நண்பானாகவே நான் பிறக்கவேண்டும்..!!