சமூகச் சான்று

நகரை சுத்தம்
செய்துக்கொண்டிருந்தான்...
சமூகச் சேவகன் அல்ல!

கலைந்த கேசம்,,
மாசுபடிந்த மேனி,,
வானத்து நட்சத்திரமாய்
உடையில் தெரியும் ஓட்டைகள்!

முதுகில் அழுக்குக் கோணியுடன்
நகரை வலம் வரும் இவன்...
சமுதாயத்தின்
அவலச் சான்று!!!

எழுதியவர் : விமல் இனியன் (3-Mar-12, 11:36 am)
சேர்த்தது : vimal iniyan
பார்வை : 160

மேலே