கப்ருஸ்தான் = கல்லறை = கறுப்பறை = என் கவிதை திரை ..

கவிதையில் காதலித்து கல்யாண கனவில்
காலத்தை போக்கும் கற்பனை காவிய நாயகர்களுக்கு மத்தியில்..
கல்லறை கனவுகளுடன் ஒரு வித்தியாச
கப்ருஸ்தான் ( கல்லறை / கறுப்பறை ) கவிதை.....

தியானம் ( அமைதி ) அதிகம் இருப்பதால்..
உனக்கு மயானம் என்று பெயரோ !!
" அடக்கம் " அதிகம் ஆனதால் உன்னை
கடக்கும் போது எல்லோருக்கும் தயக்கம் வருகுதோ...

சமத்துவத்தின் பிறப்பிடமே..
உன் எல்லையில் இல்லை ஒருவருக்கும் ஜாதி கவுரமே !!...
ஆட்டுவித்த அரசனுக்கும் ஆண்டிக்கும் ஆறடி நிலம் கொடுத்து
ஆறஅமர அசையாமல் நீ ஆட்டிவிக்கிறாயே !!!

வாழ்க்கை விண்ணில் மட்டுமல்ல.. மண்ணிலும்... மன்னுக்கடியிலும்..
மறைமுகமாய் உணர்த்தாமல் உணர்த்தினாயே..
கருவறையில் நீ இருந்தாலும் பாச நிழல் அறையில் நீ வளர்ந்தாலும்
கல்லறைக்கு கட்டாயம் வரவேண்டும் என்ற கட்டளை ஏனம்மா !!!

மண்ணுக்குள் மண்ணாக மனித உடல்கள் புதைந்தாலும்..
பாசத்தின் பல குமுறல் , பிரிவென்ற அழுகைகள்
ஒப்பாரி ஒப்பனைகள், உனை இன்றி
அதிகமாக கேட்டதில்லை இவ்வுலகில் யாரும்..

உனை விட்டு நான் ஓடி ஒளிந்தாலும்....
ஒரு நாள் நீ வருவேடா .. என காத்திருக்கும் கவிதை நீயம்மா...
பிறந்த வீட்டில் ( இவ்வுலகில் ) சில காலம் வாழும் நான்..
புகுந்த வீடு ( விண்ணுலகில் ) வரும் காலம் வெகு தூரம் இல்லையம்மா...

எழுதியவர் : கலிபா சாஹிப் (11-Mar-12, 5:37 pm)
பார்வை : 543

மேலே