இந்த காதலில்..

பார்ப்பதற்கு ஹைக்கூ
படிப்பதற்கு புதினம்

மிகப் பழமையான புதுமை
செல்வாக்கு நிறைந்த வறுமை

அருமையான எரிச்சல்
கனிவான கடுப்பு

காலச்சக்கரத்தின் விட்டம் -நம்
ஒவ்வொருவரின் நட்டம்

கூட்டத்தில் இருக்கும் தனிமை
எல்லாமிருந்தும் போகா வெறுமை

ஓரிரு வார்த்தை பேச
உலகமே நிற்கும்
பேசப்போனால் பேச்சாளனுக்கும்
நாக்கு திக்கும்

கட்டிப்போடும் சுதந்திரம்
விடுதலையிடப்பட்ட கட்டுப்பாடு

இப்படி
பிறப்பும் இறப்பும் புரியும்
அவளின் மௌனத்தை தவிர

பயணப்படாத பேருந்தின் பயணத்தில்
நிறுத்தப்படாத நிறுத்தங்கள் போல
நம் வாழ்வின் திருத்தபடாத
திருத்தங்களும் வருத்தங்களும்
இந்த காதலில்..

எழுதியவர் : எழுத தெரியாதவன் (12-Mar-12, 4:01 am)
Tanglish : intha kathalil
பார்வை : 232

மேலே