பொருத்து பார்த்தேன் வருத்தமாய் இருந்தது - மீண்டும் வேண்டுகோள்.

அன்புள்ள ரௌத்திரன்
அன்புள்ள ரௌத்திரன்,

நான் சென்ற 18.06.2011 லிருந்து எழுத்து தளத்தில் எழுதுகிறேன். அதற்கு முன்பு சில ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்த்து 'கீற்று' தளத்தில் வெளியிட்டிருக்கிறேன். எழுத்து தளத்தில் முதல் இரண்டும் ஆங்கில மொழிபெயர்ப்பு. என் மூன்றாவது கவிதையிலிருந்து சுயமாக எழுதுகிறேன். முதலில் சில கருத்துக்கள் Readers Digest Quotes லிருந்தும், அதன்பின் என் அனுபவம், காணும் காட்சிகளிலிருந்தும் எழுதுகிறேன்.

சென்ற மாதம் அமுதா அம்முவின் 'கண்ணில் பட்டது (2) என்ற கவிதைக்கு நாகமணி என்ற 21 வயது வாலிப எழுத்தாளர் எழுதிய கருத்துக்கு கடுமையான சாடல்கள் இருந்தன. அதன் தொடர்ச்சியாக நான் அமுதா அம்முவின் அனுமதியுடன் 'மதிப்பிற்குரிய அமுதா அம்மு அவர்களின் 17 கவிதைகளின் ஆய்வு' என்றும், மற்றும் சில கட்டுரைகளும் 07.03.2012 லிருந்து எழுதியிருக்கிறேன். வாசித்துப் பாருங்கள்.

என் முதல் கட்டுரைக்கு அடுத்து என் மேல் அபிமானமும் நட்பும் உள்ள கவின் சாரலன் அவர் கருத்தை 08.03.2012 ல் எழுதிய 'உள்ளம் எனும் ஊதுகுழல்' என்ற தலைப்பில் தெரிவித்திருந்தார். இத்தளத்தில் உள்ள எழுத்தாளர்கள் தகுதியை ஆய்வு செய்வது என் நோக்கமில்லை, அதற்கான தகுதியும் எனக்கில்லை. எழுத்துப் பிழைகள், அமைப்பு முறை பற்றி எனக்குத் தெரிந்த அளவில் தனி விடுகையில் தெரிவிப்பேன்.

இந்த நேரத்தில் உங்கள் கவிதைகளை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உங்கள் கவிதை அமைப்பு முறை என்னைக் கவர்ந்தது. நீங்கள் குறிப்பிட்டது போல 'தாயின் கருவிலே இறைவனூட்டப் பெற்றாலன்றி' இப்படி எழுத முடியாது. அதன் பயனாக 'வேலூர் கவிஞர் திரு.ரௌத்திரன்' என்ற கட்டுரை எழுதினேன்.

இதற்கிடையில் உங்கள் கருத்துக்கு ஏற்பட்ட விமர்சனங்கள், உங்கள் பதில்கள், மற்றவர்களின் சமாதானங்களையும் வாசித்தேன். உங்களைப் பற்றி எழுதியிருந்தீர்கள். உங்கள் கல்வி பற்றிய குறிப்புகளை அறிய விரும்புகிறேன்.

நீங்கள் இலக்கிய, இலக்கணம் கற்க வேண்டும். www.tamilvu.org/library அல்லது Nannool - kaandigaivurai by Aarumuganavalar என்ற இணைய தளத்தில் இலக்கிய, இலக்கண சம்பந்தமான தகவல்கள் விளக்கவுரையுடன் கிடைக்கின்றன. அத்துடன் venbaaezhuthalaamvaanga.blogspot என்ற தளமும் பயனுள்ளது.

நேற்று நான் வலைத்தளத்தில் ஒரு செய்தி வாசித்தேன். அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழ்த்துறையைச் சேர்ந்த ஒருவர் ஆய்வுக்காக இங்கிலாந்தில் உள்ள Reading Univerisity க்கு 1972 களில் சென்றிருந்த போது, லண்டனில் உள்ள British Museum த்தில் தமிழ் இலக்கண கையெழுத்துப் பிரதியைப் பார்த்தாராம். அதைப் பிரதியெடுத்து ஆய்வு செய்து நூலாக்கியுள்ளார். அந்த இலக்கண பதிவின் பெயர் 'சுவாமிநாதம்'. இதையும் www.tamilvu.org/library தளத்தில் வாசிக்கலாம்.

இந்த Reading என்ற ஊரில் 2006 ல் என் மகன் வீட்டில் ஏழு வாரங்கள் தங்கியிருந்த பொழுது பல இடங்கள் சுற்றிப் பார்த்தோம். அப்பொழுது இந்த செய்தி எனக்குத் தெரியாது. British Museum மும் சென்றதில்லை. வருத்தமாயிருக்கிறது.

மொத்த தேர்வு : 0
x எழுத்து குழுவிற்கு தெரிவிக்க
நீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.
Sexual ContentViolent or Repulsive ContentHateful or Abusive ContentHarmful Dangerous ActsChild AbuseSpamInfringes My Rights
எழுதியவர் :வ.க.கன்னியப்பன்
நாள் :16-03-2012 12:09:00 PM
Added by :Dr.V.K.Kanniappan
பார்வை :32
************************************
அனைத்து எழுத்து உலக நண்பர்களுக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் வணக்கங்கள் பல.

மேல உள்ள கட்டுரை வெளியாகி 4 மணி நேரங்கள் ஓடிவிட்ட்டது பார்வை 32 மட்டுமே - இதில் வேதனை என்னவென்றால் ஒருவர்கூட கருத்து சொல்லவில்லை - ஏன் இந்த நிலமை Dr.V.K.K. அய்யா அவர்கள் கவி நண்பர் ரௌத்திரனை இலக்கணம் / இலக்கியம் படி என்று கூறிவிட்டாரே, இதனால் ரௌத்திரன் கோபப்பட்டு எதையாவது எழுதிவிடுவாரோ என்ற பயத்தினால் யாரும் எந்த கருத்தும் பதியவில்லையா - நிச்சயமாக நண்பர் ரௌத்திரனை நன்கு புரிந்து கொண்டவர்கள் யாரும் அவரை எதிர்மறையான எண்ணத்துடன் பார்க்கமாட்டார்கள் (இன்று வரை எழுத்து நண்பர்கள் யாரையும் நான் நேரில் பார்த்தது இல்லை - யாருக்காக வக்காலத்து வாங்குகிறேன் என்று யாரும் சந்தேகப்படவேண்டம்) இங்கு தமிழும் தமிழ் சார்ந்த சமுதாய முன்னேற்றம் மட்டுமே குறிக்கோள். சாதாரணமாக எந்த தொழில் செய்தாலும் 5 ஆண்டுக்கு ஒரு முறையாவது பயிற்சி பட்டறை (training) நடத்தி பல புதிய நுட்பங்களை சொல்லி தருவார்கள் அந்த நோக்கத்தில்தான் ஐயா அவர்கள் ரௌத்திரனை செம்மை படுத்த கூறி இருக்கலாம். அடுத்து தம்பி நாகமணி பற்றி சொல்ல ஒன்றும் இல்லை (அவரை நாங்கள் சின்ன பிள்ளை ஆகா தான் பார்க்கிறோம் - அவரின் அனுபவம் அவருக்கு வழிகாட்டும்.) சாதாரணமாக காதல் கவிதைக்கு கருத்து கொடுப்பதை விட இதற்கு எழுதுங்கள் என்றுதான் கேட்கிறேன் - மனதில் பட்டதை எழுதிவிட்டேன். அவரவர் நெஞ்சை தொட்டு பதில் தேடுங்கள். நன்றி மீண்டும் சந்திப்போம்.

எழுதியவர் : மு.ராமசந்திரன். (16-Mar-12, 4:33 pm)
பார்வை : 484

மேலே