ஜில்லுன்னு ஒரு காதல் !

என் காதல் உண்மையானது - அது
அவன் சொன்னது !

என் அன்பு புனிதமானது - இது
இவள் சொன்னது !

இருந்தும் என்ன ஆனது - காதல்
பிரிந்து போனது !

சில்லறையாய் செலவழித்து - இவன்
கல்லறையாய் இன்று மனம் வெந்து

சிரிப்பாய் சிரித்து விட்டு - அவள்
ஜில்லென்று பறந்து விட்டால்

ஜில்லுன்னு ஒரு காதல் !
மெல்ல முடியாமல் !

எழுதியவர் : காதர் . (18-Mar-12, 6:14 pm)
பார்வை : 214

மேலே