இங்கு புண்ணாக்குகள் விற்கப்படும்..! பொள்ளாச்சி அபி

எனது கடையில் ஏராளமான வகைப்
புண்ணாக்குகள் விற்பனைக்கு உண்டு.

சில உயர்ந்த பளபளப்பிலும்
சில கரடுமுரடாயும்..
சில உடைத்தால் பொடியாவதும்
சில உடைக்கமுடியாமல் போவதும்
இன்னும் சில புண்ணாக்குதானா..?
என்ற சந்தேகத்தைக் கிளப்பும் வகையிலும்
இப்படி எத்தனையெத்தனை வகையோ உண்டு.
வீதிக்குப் பொதுவான இடத்தில்
வைத்திருக்கும் இந்தக் கடையில்
வேறுவேறு மொத்த வியாபாரிகள்
கொண்டுவந்துபோடும் சரக்கு..
வாடிக்கையாளரின் வசதிகருதி
வாங்கி விற்கவேண்டியதாயிருக்கிறது.
வருத்தம்தான் அதிலெனக்கு..!
என்ன செய்ய..சுதந்திரமென்பது
பொதுவாய்ப் போயிற்றே..!

இது என்ன கவிதைப்புண்ணாக்கு என்று
கேட்டீர்களானால்…

அதற்கு நான் பதில் சொல்லமாட்டேன்.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (19-Mar-12, 4:31 pm)
பார்வை : 244

மேலே