" மணமக்களுக்கு எனது வாழ்த்து "

தினமலரும் அல்லி மலராய் என்றுமே
நீங்களிருக்க !. அதைக்கண்டு
காலை சூரியன் மாலை மறையாமல் தினம்
அடம்பிடிக்கட்டும் !. புல்லும்
பனிதுளியுமாய் உங்கள் ஜீவனிருக்கட்டும்
நித்தம் அது அன்பால்
வானில் உலவட்டும், அறிவியல் வினாக்களுக்கு
இது உண்மை காதல் பந்தம்
என செயற்கைக்கோளும் விடைத்தரட்டும்!.
நீங்கள் விடும்
மூச்சுக்காற்றும் பிரிவிலாமல் பூமியில்
பறக்கட்டும் !...
செவ்வனாத்தை அதுதொட காற்றில் அடர்த்தி
அதிகமாகட்டும் நித்தம்
அறிவியல் உண்மையும் பொய்யாகட்டும் !..
மணமக்களே இனி உங்கள்
இல்லற வாழ்வில் என்றுமே புது வசந்தம்
பொங்கட்டும் !..

எழுதியவர் : dhamu (21-Mar-12, 2:49 pm)
பார்வை : 535

மேலே