இருட்டுதான் தமிழுக்கு.

அணு உலைக்கு எதிராக போராடும் மக்களின் அச்சத்தை போக்கவேண்டியாது ஒரு அரசின் தார்மீக கடமை. அதை தவிர்த்து அங்கு ராணுவத்தையும் காவல் துறையையும் நிறுத்துவது மக்களைக் காக்கும் அரசின் நடவடிக்கைக்கு அழகல்ல. அறவழியில் போராடும் மக்களின் போராட்டத்தை மதித்து அவர்களின் போராட்டம் குறித்த அச்சங்களை போக்காமல் அதிகாரம் இருக்கும் காரணத்தால் அப்பாவி மக்களை அச்சுறுத்த கூடாது. மின்சாரத் தட்டுபாடை சரி செய்ய தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு திட்டம்தான் தேவை. மக்களை தொலைக்கும் திட்டம் அல்ல. அணு உலை ஒன்றே தற்போதைய மின்தட்டுபாடுக்கு தீர்வு எனில் அதனால் ஏற்படும் பாதிப்புகளில் அல்லது பின்விளைவுகளில் இருந்து அங்கு வசிக்கும் லட்சகணக்கான மக்களை காக்கும் வழிமுறைகள் என்ன? அவர்கள் வாழ்வாதாரம் சீர் செய்துதரப்படுமா? என்ற அச்சங்களை போக்க வேண்டியது இந்த அரசின் கடமை. அறவழியில் போராடும் என் தமிழ் மக்களை அடித்து உதைத்து கலைத்துவிடலாம் என்று எண்ணி இந்த அரசு செயலபட்டலோ அல்லது ஒரு துப்பாக்கி சத்தம் எங்கள் காதுகளை துளைத்தாலோ இந்த தேசம் தமிழர்களின் மிக பெரிய எழுச்சியை சந்திக்கும்.
என்கவுன்ட்டர் செய்யும் துப்பாக்கிகளுக்கு எங்கள் எச்சரிக்கை.

கூடங்குளத்தில் உள்ள
குடிசைகள் எறிந்துதான்
எங்கள் வீட்டுக்கு
வெளிச்சம் கிடைக்குமென்றால்
அதுவும் ஒரு இருட்டுதான்
தமிழுக்கு.


---தமிழ்தாசன்----

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (21-Mar-12, 11:39 pm)
சேர்த்தது : தமிழ்தாசன்
பார்வை : 166

மேலே