நவீன இலக்கணம்

அரைச்சட்டை முக்கால்ச்சட்டையானது-
ஆணுக்கு;
முழுச்சட்டையும் கால்சட்டையானது-
பெண்ணுக்கு;

இல்லாத துளை தேடி,
கடுக்கண் அணியும் ஆண்,
இருக்கின்ற துளையழித்துக்
காதணி அவிழ்க்கும் பெண்;

வெட்டிய கூந்தல்
பெண்ணுக்கு,
வளர்த்துக் கட்டிய கூந்தல்
ஆணுக்கு;

வளையல்கள் அவிழ்த்து
வலக்கரத்தில் கடிகாரம்
பெண்ணுக்கு,
கடிகாரத்தைக் கழற்றிவிட்டு
வலக்கரத்தில் வளையம்
ஆணுக்கு;

உலகமயமாதல் எனும் பெயரில்
உண்மையை நாம் இழந்துவிட்டோம்!!
இனிமேலேனும் விழித்தெழுந்து
பண்பாட்டுப் பாடம் படிப்போம்!!

எழுதியவர் : Geetha (27-Mar-12, 3:46 pm)
பார்வை : 304

மேலே