கறுப்பு பணம்

அயூப்கான்புரம் என்ற சிற்றூரில் புண்ணிய கோடி என்பவர் பெயருக்கும் ஆளுக்கும் சம்பந்தமே இல்லாத புண்ணியம் செய்யாத கோடிஸ்வரர். செலவுகள் என்றான் என்ன என்பதை தெரியாத மிகப்பெரிய கன்ஞன். பயந்தான்கொள்ளி , பணம் கட்டுகாட்டாக வைத்திருப்பவர் நாமெல்லாம் பணத்தி 1 , 2 , 3 , வரிசையாக எண்ணுவேம் ஆனால் அவரோ சுவற்றில் ஆறடியில் கோடு போட்டு அதுவரை அடுக்கி வைத்து 1000 ரூபாய் கட்டில் ஆறடியில் இத்தனை 500 ரூபாய் கட்டில் ஆறடியில் இத்தனை இது மட்டுமில்லாமல் பக்கத்து நாட்டு வங்கியும் பணத்தை போட்டு வைத்துள்ளார் ...தினம் தினம் சாப்பிடவாரோ என்னமோ ஆனால் பணத்தை பார்த்தால் தான் அவருக்கு தூக்கமே வரும் .. பயந்தான்கொள்ளி என்பதால் திருடு போய் விடுமோ என்ற எண்ணத்தில் அவனின் தோட்டத்தில் போய் ராத்திரி 12 மணிக்கு தன் பணத்தை ஒரு குழி தோண்டி புதைத்து விட்டார் பக்கத்தி அடையாளத்திற்கு ஒரு கல்லை பதித்து வைத்துவிட்டார் ...பக்கத்து நாட்டில் பணம் போட்டுள்ள வங்கி புத்தகம் மட்டும் கையில் வைத்துள்ளார் .....
தினம் தினம் போய் தோட்டத்தில் பணம் பதித்த இடத்திற்கு சென்று கல் பிடுங்கே இருக்க மண் ஏதேனும் தொண்டப்பட்டுள்ளதா என பார்த்து பார்த்து வந்து வங்கி புத்தகத்தையும் பார்த்துதான் தூங்கூவார் ..
இப்படி பல நாள் கழிந்தது
ஒருநாள் அந்த ஊரில் உள்ள குரு ஒருவர் அந்த தோட்டத்திற்கு பூ பறித்து கொண்டு இருந்தார் இதை கவனிக்காத புண்ணிய கோடி எப்போதும்போல கல்லை சுற்றி சுற்றி வந்து தரையை தட்டி பார்த்து விட்டு சென்று விட்டார் .குருவுக்கு சந்தேகம் வந்து விட்டது சரி நாளை வந்து பார்க்கலாம் என எண்ணி குரு சென்று விட்டார்
மறு நாள் அதே போல குரு அதிகாலையிலே வந்து கவனித்து இருந்தார் வழக்கம் போல புண்ணிய கோடி வந்தார் அதே போல் கல்லை பார்த்து தரையை பார்த்து சென்றார். சரி இன்னக்கு ராத்திரி வந்து என்ன என்பதை பார்ப்போம் மனதில் எண்ணிய குரு சென்றார்
ராத்திரி வந்த குரு கல்லுக்கு பக்கத்தில் வந்து தரையை தட்டி பார்த்தார் மொத் மொத் என்று சப்தம் வந்தது மண்ணை தோண்டினார் கத்தை கத்தையாக பணம் .சரி ,சரியான பாடம் இவனுக்கு கற்று கொடுக்கணும் எண்ணிய குரு பணத்தை எல்லாம் எடுத்து போய் விட்டார்.......
எப்போதும்போல வந்த புண்ணிய கோடிக்கு அதிர்ச்சி ஓ என அழுதார் புரண்டார் துக்கம் தாங்காமல் மண்ணை எடுத்து தலையில் கொட்டினார் .. யார் எடுத்திருப்பார்? எப்படி விசாரிப்பது? இவ்வளவு பணத்திகு கணக்கு அரசாங்கம் கேட்குமே? யோசனையில் இருந்தார். சரி குருவிடம் சென்று பணம் என்று சொல்லாமல் வேறு ஏதாவது சொல்லி கண்டு பிடித்துவிடலாம் எண்ணிய புண்ணிய கோடி குருவிடம் வந்தார்
"குருவே நான் தோட்டத்தில் ஒரு மாமரம் நடுவதற்காக மாங்கொட்டை ஒன்று புதைத்து வைத்தேன் அதை காணவில்லை நீங்கள்தான் அந்த கோட்டையை எங்கிருக்கு என கண்டுபிடித்து தரவேண்டும்"
குருவாயிற்றே அவருக்கு புரியாமல் இருக்குமா "சரி புண்ணியகோடி அடையாளம் ஏதாவது சொல்" உடனே ஒரு கல் ஒன்று பதித்து வைத்தேன் புண்ணிய கோடி சொன்னார் .
குரு "உண்மையை சொல் நீ மாங்கோட்டயா வைத்தாய் அப்போது எதற்கு கல்லை பதித்தாய்?" உண்மையை சொல்கிறேன் பணம் தான் வைத்தேன் என்றார் புண்ணிய கோடி
பணம் என்பது அரசாங்கத்தி சொத்து,அதை பொருளை மாற்றிக்கொள்ள ஒரு பொருளாக மட்டும் பயன்படுத்த வேண்டும் ,பேருந்து அரசாங்க சொத்து அதை எந்த தனி நபரும் பயன் படுத்தலாம் ஆனால் அதை வீட்டில் வைத்து பூட்ட முடியாது அதை போல் தான் பணத்தை எந்த தனி நபரும் பூட்டி வைக்கமுடியாது ...என அறிவுரை வழங்கினார்
மேலும் குரு சொன்னார் அந்த பக்கத்து நாட்டில் உள்ள வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ளாய் அதனால் என்ன அனுபவித்தாய் .புதைத்து வைத்த பணத்தால் என்ன அனுபவித்தாய் .தினம் தினம் தோட்டத்திற்கு வந்து பணம் இருப்பது போல் நினைத்து செல் எப்போதுப்போல இருப்பாய் என அறிஉறை சொல்லி மறுநாள் வா "நான் கண்டுபிடித்து தருகிறேன் என புண்ணிய கோடியை அனுப்பினார் குரு .. இவன் திருந்தி விட்டானா என்பதை பார்க்க குரு ஒரு பூட்டு போட்ட மணலால் நிரப்பிய பெட்டியை எடுத்தார் கொஞ்சம் பண கட்டை எடுத்தார்
மறுநாள் புண்ணிய கோடி குருவிடம் வந்தார் குருவே கண்டுபிடித்துவிட்டீரா ? ஆம் ஒருவன் என்னிடம் கொடுத்து விட்டு போய்விட்டான் இதோ உன்னுடைய பணம் "இவ்வளவுதானா ?
அதோ பெட்டியில் இருக்கு "மணலால் நிரப்பிய பெட்டியும் பணமும் கொடுத்து இதன் சாவியை பத்து நாள் கழித்து வந்து வாங்கிகொள்" என்றார் குரு
பத்து நாள்முடிந்தும் சாவியை வாங்க வரவில்லை புண்ணிய கோடி , குரு புண்ணிய கோடி வீட்டிற்கு சென்று
ஏன் சாவியை வாங்க வரவில்லை குரு கேட்டார் சாவி இருந்தால் மனம் திறக்க சொல்லும் செலவு பன்னசொல்லும்
அதான் எதற்கு? என சொன்னார் புண்ணிய கோடி குருவுக்கு தூக்கி வாரி போட்டது "அடப்பாவி இது வெறும் மண்ணுட மடையா """ நீ திருந்தவே மாட்டாய் உன் பணம் என்னிடம் தான் உள்ளது வந்து வாங்கி கொள் என்றார்
குருவிடம் மீதி பணத்தி வாங்கி பழைய படி தோட்டத்தில் வேறு இடத்தில் எல்லா பணத்தியும் புதைத்து விட்டான் புண்ணிய கோடி
ஒரு நாள் புன்னியகோடிக்கு மரணம் நிகழ்ந்து விட்டது தோட்டத்தில் பணம் இருப்பதை அறியாத அந்தஊர் மக்கள் புதைத்து இருந்த பணத்தின் அருகிலே குழிதோண்டி புண்ணியகோடி சடலத்தை புதைத்துவிட்டனர்
அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளிவிடுகிறது இன்று முதல் 1000 ,500.ரூபாய்கள் செல்லாது ஏன் என்றால் பக்கத்து நாடு திவால் ஆனதால் பணத்தின் மதிப்பு மாறிஉள்ளது என்று
புண்ணியகோடி மண்ணோடு மண்ணானான் ,அவன் பணமும் மண்ணோடு புதைந்தது பக்கத்து நாட்டு திவாலால் வங்கி பணமும் தவளை போனது ...................................

எழுதியவர் : தபரேஜ் (27-Mar-12, 5:26 pm)
பார்வை : 487

மேலே