வாழ்க்கை துணை !

உறுதி மொழியோடு உறவாக
உன்னை கை பிடித்து வாழ்க்கையாய்

காலமெல்லாம் உன்னோடு - உன்
எல்லா சுக துக்கங்களிலும் துணையாய்

வாழ்கையின் படிக்கட்டுகளில் ஏற
இணைந்து இருவரும் அடியெடுத்து

துணையாக உன்னுடன் கை கோர்த்து
மந்திரியாக உன் ஆலோசனையில்

உன் வாரிசை மண்ணில் தர - அவள்
ஏடுத்தது ஒரு மறு ஜென்மம்

இன்பம் கொண்டு சந்தோசமாய் - தனை
கஷ்டத்திலும் வருத்தி கொண்டு

உன் எல்லா நிலையில் உறவாக




இணைந்தே உன்னுடன் தளராமல்

வாழ்வோம் என்று உறுதியுடன் - உன்
இறுதி ஊர்வலம் வரை வீதி வந்து

கண்ணீருடன் வாழ்ந்த நாட்களையும்
வாழப்போகும் மீதி வாழ்க்கையையும்

மனதில் எண்ணி கனத்த நினைவில்
தளர்ந்து மயங்கி மண்ணில் சாய்ந்து

துணை இல்லா வாழ்க்கையாக
தனி மரமாக இந்த " வாழ்க்கை துணை "

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (27-Mar-12, 8:27 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 1337

மேலே