நான் ஒரு ராசி இல்லா ராஜா !

பிறந்தது முதல் இன்று வரை
ஓடிக்கொண்டே இருக்கிறேன்

ஓய்வெடுக்க வழி இல்லை - இன்னும்
ஓடும் வலி உடம்பிலும் இல்லை

கூட பிறந்த உடன் பிறப்பும் - எனக்கு
ஓடி போன கடன் பிறப்பு

தந்திரமாய் சொத்தை பிடுங்கி விட்டு
என் தலைக்கும் தொப்பி போட்டு

என் போல் ஏமாளிகள் இருக்கும் வரை
ஏமாற்ற்றுபவர்கள் உலகில் அதிகம்

இன்னும் ஜான் ஏறினால் - எனக்கு
முழம் சறுக்கும் நிலை

நான் ஒரு ராசி இல்லா ராஜா - என்
பாசத்துக்கில்லை இது வரை உறவு !

ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (27-Mar-12, 11:00 pm)
பார்வை : 436

மேலே