வாடிய முகங்கள் !

இளமை விடை சொல்லும் போது
முதுமை தன்னை இணைத்து கொள்ளும்

இது இயற்கையின் மாற்றங்கள்
இறைவன் வகுத்து தந்த விதி

உதிரங்களின் வேகம் ஈடு கொடுத்தது அன்று
உறவுகளின் அன்புதான் ஆதரிக்கணும் இன்று

சுருங்கிய தேகம் உழைப்பின் அடையாளம்
எல்லோரையும் வாழ வைத்து விட்டு
எலும்பு கூடாய் உடல் தோற்றம் இன்று !

வாடிய முகங்களுக்கு வாழ்வளிப்போம்
இறுதி வரை மனம் மாறாமல்............

இது !

பங்களிப்பு அல்ல..................
நம் கடமையும் கூட !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (30-Mar-12, 10:23 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 203

மேலே