ஒரு பிடி சோறு தருவாயா எனக்கு?

தெறித்து விழுகின்றன...
அன்று
நான் உன்னைச் சுட்ட
வார்த்தைகள்,
இன்று
நீர்த் துளிகளாக
கண்களிலிருந்து...

எரித்தே விடுகின்றன
உனது மீதான
எனது
அன்றைய
கோபப் பார்வைகள்
இன்று
என் அறைக கண்ணாடி
முன் நின்று...

தெரியவில்லை எனக்கன்று!
எனக்காய் வாழ்வது
நீ மட்டும்தானென்று!
தனியே இன்று
நீயில்லாமல்
நகர மறுக்கின்றன
நாட்களிங்கு...

அழுது கொண்டு
வந்தபோதும்
சிரித்த முகமாய்
வீடு திரும்பும்போதும்
என்னை ரசித்த
ஒருத்தி
நீதானடி
என் உயிரே!

மன்னிக்காதே என்னை
என நான் மன்றாடினாலும்
மன்னித்துவிட்டே
மறுவேலை பார்ப்பாய் நீ!
உயிர் பிரியும்போது
உடனில்லா
பதரானேன்!

தொலை தூரம்தான்
போய்விட்டாயோ?
தொடும்தூரம் இருந்தபோது
தவறவிட்டேனோ?
அம்மா அம்மா
என்று அறை கிழிய அலறினாலும்
திரும்பி வரப்போவதில்லை நீ!

கடல் கடந்தும்,
இடம்பெயர்ந்தும்,
பணம் முளைக்கும்
கைகள் செய்த
பட்டதாரி பிள்ளைகளே...
மாண்டவர் மீள்வதில்லை...
நீங்கள் அருகில் இருக்கும் நாட்கள் உட்பட...

எழுதியவர் : Agniputhran (31-Mar-12, 6:35 am)
பார்வை : 229

மேலே