பண்ணை (சென்னை ) வீடு !

பண்ணை வீடு எங்கள் சென்னை வீடு
நீதிமன்றத்தில் இன்று தங்க வீடு

தனக்கு மட்டும் என்று நினைத்தால்
இன்னும் அபகரிப்பு எண்ணம் கூடும்

தட்டி விழுந்தால் உடன் மரணம்
உலகில் மனிதனின் அற்ப வாழ்க்கை

நீ உணரும் வரை மனிதன் இல்லை
உணர்ந்து கொள் இறைவன் தந்த நிலை

ஊருக்குதான் உபதேசம் - என்றும்
தனக்கில்லை புத்தி சேதம்

ஆடியவன் எல்லாம் ஓய்ந்த்திடுவான்
அரை நொடியில் நரம்பு இழுத்து

பங்கு கொடுப்பதில் துரோகம் - இன்னும்
படைத்தவனிடம் பெரும் கோபம்

அஞ்சிக்கொள்ளுங்கள் அல்லாஹுவிடம்
அவனே படி அளப்பவன் !

பண்ணை வீடு !
உண்மைகள் வாழ்ந்த்த இடம்
உண்மையே ஜெயிக்கும் !

-ஸ்ரீவை.காதர் .

எழுதியவர் : காதர் . (1-Apr-12, 10:11 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 1033

மேலே