திராவிடத் தமிழன்

தமிழ் எங்கள் பேச்சு,
தமிழ் எங்கள் உயிர் மூச்சி,
திராவிடத் தமிழன் நான் - என்று
பழங்கதையை பகட்டாய் பேசி
பகிரங்கமாய் திரியும்
தமிழத் தலைவர்களே - தலைவிகளே!

உங்கள் அனைவருக்கும் ஒன்று சொல்கிறேன்
கேளுங்கள்,

உண்மை தமிழன் நீங்கள் அல்ல.
எங்கோ ஒரு மூலையில்
இருந்தாலும்
உயிர்குடியை அறுத்தாலும்

தமிழ் வாழ
தான் சாகிறேனே,
அவன்தான்
உண்மை தமிழன்.

எழுதியவர் : ராஜேஸ்குமார் (2-Apr-12, 11:52 am)
சேர்த்தது : rajeshnannilam
பார்வை : 205

மேலே