தமிழன்னையின் அன்பு

அன்னையின்
அன்புக்கு
நீயென்ன? நானென்ன?

வளர்ந்துவிட்ட உனக்கு
தர மறுப்பதில்லை
தாயின் அன்பு!

வளரத்துடிக்கும் என்னை
வாழ வைக்கவே
துடிக்கிறாள்
நம் அன்னை.

நடக்கத் தெரிந்த உனக்கு
தேவையில்லை அன்னையின் கரங்கள்!

தவளத் துடிக்கும் என்னை
தூக்கவே ஒடி வரும்
அவள் கால்கள்.

படைப்பால் நீயும் என்
சகோதரனே!

தமிழால் நீயும் என்
தாயின்
வயிற்றில்
பிறந்தவனே!

பின்னெதெற்க்கு
கேட்கிறாய்
தம்பிக்கு மட்டும்
தேன் மிட்டாயா என்று?

எழுதியவர் : ராஜேஸ்குமார் (2-Apr-12, 12:49 pm)
சேர்த்தது : rajeshnannilam
பார்வை : 254

மேலே