தலை வணங்கும் பலம் !

இதன் பலம் மட்டும் அல்ல
தோற்றமும் தான் பெரிது
தன் பாகனுக்கு மட்டுமே இது
பணியும் குணம் கொண்டது
இந்த கால் கட்டு தற்பாதுகாப்பு
தலைவனின் ஆணைதான் கட்டுப்பாடு
இதன் வாழ்வு நிலையும் அப்படித்தான்
இருந்தாலும் , இறந்தாலும் ஆயிரம் பொன்
தம் பலம் கொண்ட எண்ணம்..........
பாகனுக்கு மட்டுமே தலை வணங்கும் பலம் !
-ஸ்ரீவை.காதர் -