கொஞ்சம் சோறு ! கொஞ்சம் வரலாறு !

அறிவியல் வளர்ந்து இங்கே
மாற்றங்கள் கண்டு கொண்டோம்

அழியாத சத்துக்களையும் நாம்
சேர்க்காமல் விட்டு விட்டோம்

இன்றும் நம் கிராமங்களில் இந்த
விறகு அடுப்பு , மண் பானை சோறு

கைகுத்தல் அரிசியில் சுவையான சாப்பாடு
கை மீறி விட்டது இன்றைக்கு கிடைக்குமா

சத்தெல்லாம் செத்துப்போயி - இன்று
குக்கர் சமையலும் கெட்டு போயி

எதிர்ப்பு சக்தி உடம்பில் இல்லை
எலும்பும், தோலுமாக உடல் அழகு

ஒரு புடி சோற்றிலும் சத்து உண்டு
கிடைக்குமா ?
மண்பானை சோறு !

கொஞ்சம் சோறு !
கொஞ்சம் வரலாறு !!-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (3-Apr-12, 8:58 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 408

மேலே