தன்னம்பிக்கை! பிழைத்துக் கொள்ளும்!!

தொலைக் காட்சியில்
பார்த்தேன் சில நிமிடங்கள்,
பிரமித்தேன் - அச்சத்தை
ஏற்படுத்திய அற்புதக் காட்சி;

தேசிய புவியியல் அலைவரிசை,
(National Geography Channel)
சிங்கக் கூட்டம் - ஏழெட்டு சிங்கங்கள்,
தனித்த வளர்ந்த பெண் யானை,
புதிது இன்று கண்ட காட்சி;

யானைப் பிடரியில் ஒன்று,
யானையின் பின் முதுகில் ஒன்று,
பக்கங்களில் - இரண்டிரண்டு
வயிற்றுக்கடியில் தொங்கியபடி இரண்டு;

முன்னங்கால்கள் திடமாக இருக்க
பின்னங்கால்கள் தளர்ந்து விழுந்தது,
இறுதி முயற்சி - யானை முயன்று எழுந்தது,
சிங்கங்களை உதறி நடை போட்டது;

உடலெங்கும் இரத்த ஒழுக்கும்
காயங்களும் - கரிய உடல் சிவந்தது,
தப்பித்து விரைந்தது - தன்னம்பிக்கை!
பிழைத்துக் கொள்ளும்!!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Apr-12, 10:41 am)
பார்வை : 258

மேலே