குருசினில் ஒரு கோமகன்
குருசினில் ஒரு கோமகன்
சிரசினில் என் பாவ கொடுக்குகள்
கரத்தினில் என் கையாலாகாத செயல்கள்
நெஞ்சினில் என் காய்மகாரங்கள்
நொறுங்கிய விலாவினில் என் கோபங்கள்
வறண்ட தொண்டையில் என் வறட்டு நியாயங்கள்
ஒட்டிய வயிற்றிலே என் போஜன பிரியங்கள்
உடைந்த எலும்பினில் என் திமிரான காரியங்கள்
நலிந்த தேகமெங்கும் என் நன்றி கெட்ட தனங்கள்
இன்றே உம்மை கண்டபின் நான் என்னை தொலைப்பேனோ?
இன்றே உம் கோலம் கண்டபின் என் நிலையை
சீர் படுத்துவேனோ?