நிலநடுக்கம்

மக்களை சிரிக்க வைக்க
பூமாதேவி மூட்டும் கிச்சு கிச்சு
சிலநேரங்களில் தாலாட்டு
சிலநேரங்களில் தள்ளாட்டு

பாவமென்று நினைத்தால்
குண்டூசியால் குத்துவாள்
கோபம வந்துவிட்டால்
கடப்பாரையால் கொன்றுவிடுவாள்

சிலநேரங்களில் சிறுபிள்ளைபோல்
விளயாண்டது போதுமென்று
வீடுகளை களைத்துப்போடுவாள்

அப்படியே போகிறபோக்கில்
அவள் தங்கை சுனாமியிடம் சொல்லி
அகப்படுவதைஎல்லாம் சுருட்டிக்கொள்வாள்.

எது எப்படியோ....

எங்க ஊரு தொலைகாட்சிக்கு
அவல் கிடைச்சிப்போச்சு!
எங்க ஊரு மந்திரிகளுக்கு
நிவாரணம் வசுளாகிப்போச்சு!

(ஊரே நிலநடுக்கத்தால் நடுங்கும்போது
உமக்கு ஏன் இந்த சிரிப்பு?
எனும் அன்பர்களுக்கு......
எங்க வீட்டிலும் பாத்திரங்கள் பறக்கும்
நிலநடுக்கம் வரும் என் மனைவி ரூபத்திலும்)

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (11-Apr-12, 4:28 pm)
பார்வை : 372

சிறந்த நகைச்சுவைகள்

மேலே