நினைவு நாள்

எழும்பினேன் ..கூப்பிட்டதும் ..
இனிமையான மணம் பரவ
குளிர்ந்த தென்றலின் நடுவே ,
எனை அழைத்தவரை தேடி ,

நேரம் செல்கிறது ,
தேடி தேடி பார்கிறேன்
பசியில்லை ,நினவுகளில்லை..
ஆனாலும் சாப்பிட தேடுகிறது மனம்

சந்தோசம் ,புன்னகை ,இனிமையான
சொற்கள் ,இவை மட்டுமே காதில் கேட்க ...
நிறைய பேரை பார்கிறேன் ஆனாலும்
அவர்களில்லை யாரும் என்னை கண்டு கொள்ளவும்
இல்லை ....இன்னும் யாரெண்டு தேடி கொண்டே இருக்கிறேன்..

எனை கூப்பிட்டது யார் ,என்னவளா ,
மகனா ,மகளா ,என் அம்மாவா ,
தெரியவில்லை ,இந்த தேடுதலில்
மனம் லயித்து நிறைவாகி கொண்டே
போகிறது ,அளவில்லா சந்தோசம் ..
நினைவுகள் அனைத்தும் அழிகிறது -யார் நான்

வருகிறர்கள் இருவர் ஒளியை விடவும்
அதிகமான வெளிச்ச துணையுடன்
கைபிடித்து செல்கிறார்கள் ,
சுகமான குளிரில் விரைத்து-பின்செல்ல
தூக்கி வீசுகிறார்கள் ..

மூச்சு விடவே சிரமான நிலையில்
ACயும் நின்று ,FANம் நின்று
இறுக்கமான நிலையில் ..
செயலற்று போன நான்
திடுக்கிட்டு எழும்ப...

யாரை தேடினேன் நான் .........
இது மட்டும் என் கேள்வியில்.......
அம்மா சொல்கிறாள்..........
அப்பாவின் நினைவு நாள் இன்று என.........

எழுதியவர் : tamizhselvi (14-Apr-12, 9:06 pm)
Tanglish : ninaivu naal
பார்வை : 1413

மேலே