கருவறையில் கடவுளிடம்...
கடவுளே..!
வெளியில் காலம்
கெட்டுக் கிடக்கிறதாமே, அதனால்
நான் கருவறையிலேயே
வேண்டிக் கொள்கிறேன்...
என்னைச் சுமப்பவளுக்கும்,
கொஞ்சம் சுத்தமான
சிந்தனையைக் கொடுங்கள்..
நான் பிறந்ததும் - என்
உடல் குப்பைத் தொட்டிக்கு
குடி போகாமல் இருக்க..!