கண்தானம்

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், சிபுடுபள்ளியை அடுத்து மேட்டபள்ளி கிராமத்தில் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்தி இருக்கிறார் சிபுடுபள்ளியை சேர்ந்த மனிதநேய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் திரு கோவிந்தராஜ். அவர் உரையை கேட்ட கிராம மக்கள் 5000 பேர் தங்கள் கண்ணை தானமாக வழங்க முன்வந்துள்ளனர்.அதற்க்கான உறுதி பத்திரத்தில் அத்தனைபேரும் கையெழுத்திட்டுள்ளனர். அந்த கிராமத்தில் மொத்தம் மக்கள் 7000௦௦௦ பேர். அதில் 5000௦௦௦ பேர் தங்கள் கண்ணை தானமாக கொடுக்க முன்வந்துள்ளனர். இதுவரை 42 கிராமங்களை சேர்ந்த 55 ,000 பேர் தங்கள் கண்ணை தானாமாக கொடுக்க முன்வந்துள்ளனர் அதற்க்கான உறுதி பத்திரத்திலும் அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். என திரு கோவிந்தராஜ் தெரிவித்தார்.

---தினமலர் நாளிதழில் இன்று படித்த செய்தி இது. நாளிதழின் ஒரு ஓரத்தில் கிடந்தது இந்த செய்தி.
வங்கி கொள்ளை என தலைப்பு செய்தியிடும் முக்கிய செய்திகளுக்கு மத்தியில் இதுபோன்ற நல்ல செய்திகளை ஒதுக்கபட்டோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை போல தருவது ஏன் என்று புரியவில்லை?

திரு கோவிந்தராஜ் அவர்களுக்கும், 42 கிராமங்களை சேர்ந்த 55 ,000௦௦௦ மக்களுக்கும் இதுவரை கண்தானம் செய்த நல்ல உள்ளங்களுக்கும் இனி கண்தானம் செய்யவிருக்கும் நல்ல உள்ளங்களுக்கும் இச்செயல் ஒரு மனிதநேய சாதனை என கருதும் மக்கள் சார்பாக நன்றி கூறி தலைவணங்குகிறேன்.

இந்த மனிதநேய செயலை நம்மாலும் நிகழ்த்த முடியும். நிகழ்த்துவோம். அவர்களால் முடியுமெனில் ஏன் நம்மால் முடியாது.

---- தமிழ்தாசன்----

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (17-Apr-12, 9:01 pm)
சேர்த்தது : தமிழ்தாசன்
பார்வை : 262

மேலே