அம்மா... நீயே துணை...!

காற்றிலே நீ  இருக்கிறாய்
என்னை வருடி விட்டு வாழ்த்துவதாலே!
 
நீ சுவாசிக்கும் காற்றை கடன் வாங்கி
நான் இன்னொரு ஜென்மம் செய்துடுவேன்!
நீ  பேசிடும் வார்த்தைகள் கோர்த்துவைத்து
ஒரு கவிதை புத்தகம் வெளியிடுவேன்!
 
உன் கை விரல் படுகிற ஓவியமும்
புது உயிர் பெற்று நடைபயிலும்!
நீ தூங்கும் அந்த காணி நிலம்
என் கோவில் கருவறை ஆகிறதே!
 
விழிகளில் வடிகிற கண்ணீரை-நீ
வியர்வை துழிகளாய் நினைக்க வைத்தாய்!
நான் செல்லும் பாதை வெகுதூரம்
நீ துணையாய் இருந்தால் அது போதும்!!!

எழுதியவர் : கதிர்மாயா (22-Apr-12, 10:41 pm)
பார்வை : 189

மேலே