[207 ] கல்லறைக் கவிதை..!
சொல்லவொரு வார்த்தை இன்றிச்
... சோகத்தை முகத்தில் தூக்கிச்
செல்லவரும் நேரம் தன்னைச்
... சிந்தையில் ஏற்றி நிற்பார்
வல்லின மெல்லி னங்கள்
... வாயிலா இடையோ டங்குக்
கல்லறைக் கருங்கல் மீதென்
... கவிதையைப் படித்த வாறே!
இன்னுமொரு கவிதை என்றே
... எழுந்துமே படிக்கப் போமோ
என்னுமொரு நினைப்புத் தோன்ற
.... இருதயத் துடிப்ப டக்கி
முன்னரொரு கட்டுப் பத்தி
... முந்தினோர் ஏத்தி வைக்க
பின்னரெழும் புகையி னூடே
... பேசிடா தகன்று மீள்வர்!
-௦-